குறள் 11- கதை 11

குறள் 11: வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று மு.வ விளக்கம்: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும் சாலமன் பாப்பையா விளக்கம்: உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் கலைஞர் விளக்கம்: உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. கதை : கண்ணன் மாடி குடியிருப்பில் வசித்து வந்தான். அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு மேல் வேறு வீடு இல்லை. ஆதலால் வெப்பம் கீழிறங்கியது. அவன் பெற்றோர்கள் கிராமத்தில் வசித்து வந்தனர். கண்ணனுக்கு அந்த வீட்டில் மிகவும் வியர்வை அதிகமாக இருந்தது. வேறு வீடு மாறலாம் என்றாலும் எங்கு சென்றாலும் இதே நிலைமைதான். அவனுக்கு கிராமத்திற்கு சென்று வர வேண்டும் என்று தோன்றியதால் விடுப்பு எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றான். அப்போது அவன் பெற்றோரிடம் அவன் இருக்கும் வீட்டையும் வெயிலையும் எடுத்து சொன்னான். கிராமத்தில் அவன் இருக்கும் வீட்டில் பின் புறத்தில் பெ...