இடுகைகள்

bed time Stories லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குறள் 13: விண்இன்று பொய்ப்பின்

படம்
 குறள் 13: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி மு.வ விளக்கம்: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் கலைஞர் விளக்கம்: கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்    கதை : நகுலன் தனியார் துறையில கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தான் .  அவனின் பணியே ஆறு ஏரி குளங்களை பிளாட் போட்டு விற்று கொடுப்பது. அதில் நல்ல லாபமும் பார்த்தான் . நாடு முழுவதும் தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் அதிகரிக்க அதிகரிக்க மரம், இயற்கை இவற்றின் தேவைகள் மனிதனின் கண்களுக்கு புலப்படவில்லை .  இதற்கு நகுலனும் விதி விலக்கல்ல . தனக்கு சொந்தமான விளை நிலங்களை கூட விற்று விட்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தான் .  பருவ காலம் மட்டும் தாமதித்து கொண்டிருக்குமா ? அதுவும் தன் வேலையை காட்ட தொடங்கி இருந்தது . மழைக்காலம் வந்தால் அதீத மழை பொலிவும் வெயில் காலம் வந்தால் தாங்க முடியாத வெப்பமும் நிலவியது .  ஊரெங்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு .  அரிசி பருப்...

குறள் 12- கதை 12 துப்பார்க்குத் துப்பாய

படம்
குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை மு.வ விளக்கம்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் கலைஞர் விளக்கம்:   யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது. சாலமன் பாப்பையா விளக்கம்: நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.   கதை : ஆறுமுகத்திற்கு 70 வயது நிரம்பியிருக்கும். தனது மகன் சண்முகம் விவசாய நிலத்தை விற்பதற்காக கையெழுத்து கேட்டு கொண்டிருந்தான் . ஆறுமுகத்திற்கு அதை விற்க மனதில்லை. சண்முகமோ அப்பா இந்த இடத்தை ரியல் எஸ்டேட் முகவர்களிடம் விற்றால் நிறைய விலைக்கு போகும் . அதை வைத்து நான் வியாபாரம் செய்து பிழைத்து  கொள்வேன் தயவு செய்து கையொப்பமிடுங்கள் என்று கூறினான் . சண்முகம் சொல்வதும் சரியென ஆறுமுகத்திற்கு பட்டது . முன் காலத்தில் பருவ மழை தவறாது பெய்து அந்த மழையால் விவசாயம் செழிப்பாக இருந்தது, அது மட்டுமில்லாம...

குறள் 11- கதை 11

படம்
  குறள் 11:  வானின் றுலகம் வழங்கி வருதலால்  தானமிழ்தம் என்றுணரற் பாற்று  மு.வ விளக்கம்:  மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்  சாலமன் பாப்பையா விளக்கம்:  உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் கலைஞர் விளக்கம்:   உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.   கதை : கண்ணன் மாடி குடியிருப்பில் வசித்து வந்தான். அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு மேல் வேறு வீடு இல்லை. ஆதலால் வெப்பம் கீழிறங்கியது. அவன் பெற்றோர்கள் கிராமத்தில் வசித்து வந்தனர். கண்ணனுக்கு அந்த வீட்டில்  மிகவும் வியர்வை அதிகமாக இருந்தது. வேறு வீடு மாறலாம் என்றாலும் எங்கு சென்றாலும் இதே நிலைமைதான். அவனுக்கு கிராமத்திற்கு சென்று வர வேண்டும் என்று தோன்றியதால் விடுப்பு எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றான். அப்போது அவன் பெற்றோரிடம் அவன் இருக்கும் வீட்டையும் வெயிலையும் எடுத்து சொன்னான். கிராமத்தில் அவன் இருக்கும் வீட்டில் பின் புறத்தில் பெ...

அதிகாரம் 2 – வான்சிறப்பு

படம்
குறள் 11:  வானின் றுலகம் வழங்கி வருதலால்  தானமிழ்தம் என்றுணரற் பாற்று  மு.வ விளக்கம்:  மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்  சாலமன் பாப்பையா விளக்கம்:  உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் கலைஞர் விளக்கம்:   உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. குறள் 12:  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்  துப்பாய தூஉ மழை  மு.வ விளக்கம்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை  விளைவித்துத்  தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் கலைஞர் விளக்கம்: யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது குறள் 13:   விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி  மு.வ விளக்கம்:   மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக ...

குறள் 10 - கதை 10

படம்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். மு. வரதராசன் உரை :  இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. சாலமன் பாப்பையா உரை :  கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார் கலைஞர் உரை :  வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்   கதை : ஒரு ஊர்ல கண்ணதாசன் அப்படினு ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு இப்போ அறுபது வயது. அவருக்கு மகிழன் னு ஒரு பையன் இருந்தான். அவனுக்கு வயது 25. இன்றைக்கு மகிழன் வாழ்க்கையில ஒரு முக்கியமான நாள்.  ஆம், மகிழனுக்கு ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்துல நல்ல சம்பளத்துள வேலை கிடைச்சுருக்கு. இந்த மகிழ்ச்சியான செய்தியோடு மகிழன் சைக்கிளை மிதித்துக்கொண்டு வேகமாக பீமாராஜ் ஆசிரியரை சந்திக்க சென்றான்.  பீமாராஜ் ஆசிரியர்தான் மகிழனின் உயர்ந்த நிலைக்கு காரணம். ஆம்,  பீமாராஜ் வாத்தியார்தான் மகிழன் 10 முதல் 12 வகுப்பு...

குறள் 9 - கதை 9

படம்
குறள் 9 : கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. சாலமன் பாப்பையா விளக்கம்: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே கலைஞர் விளக்கம்: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் கதை: ஒரு ஊரில் சின்னப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் சிறுவயதிலேயே மதுவிற்கு அடிமை ஆனான். அதே ஊரில் கண்ணப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். சின்னப்பன் , கண்ணப்பனும் ஒன்றாக படித்தவர்கள். கண்ணப்பன் சிறுவயது முதலே நன்றாக படித்து வந்தான். பெரியவர்களின் சொல் கேட்டு அவர்கள் கூறும் வழியில் நடந்து இன்று பெரிய வேலையில் உள்ளான். ஆனால் சின்னப்பன் மதுவிற்கு அடிமையானதால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. அவன் மனம் போன போக்கிலே வாழ்ந்து வந்தான். அவனது பெற்றோர் சொல் பேச்சு கேட்க வில்லை பெரியவர்கள் சொல்பேச்சு கேட்க வில்லை. ஒருநாள் மது அருந்திவிட்டு ஒரு சாக்கடையில் விழுந்து கிடந்தான்....