குறள் 9 - கதை 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
சாலமன் பாப்பையா விளக்கம்:
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையேகலைஞர் விளக்கம்:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்கதை:
ஒரு ஊரில் சின்னப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் சிறுவயதிலேயே மதுவிற்கு அடிமை ஆனான். அதே ஊரில் கண்ணப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். சின்னப்பன் , கண்ணப்பனும் ஒன்றாக படித்தவர்கள். கண்ணப்பன் சிறுவயது முதலே நன்றாக படித்து வந்தான். பெரியவர்களின் சொல் கேட்டு அவர்கள் கூறும் வழியில் நடந்து இன்று பெரிய வேலையில் உள்ளான். ஆனால் சின்னப்பன் மதுவிற்கு அடிமையானதால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. அவன் மனம் போன போக்கிலே வாழ்ந்து வந்தான். அவனது பெற்றோர் சொல் பேச்சு கேட்க வில்லை பெரியவர்கள் சொல்பேச்சு கேட்க வில்லை. ஒருநாள் மது அருந்திவிட்டு ஒரு சாக்கடையில் விழுந்து கிடந்தான். அப்போது அவனை எழுப்ப முயன்ற சிலரை அவன் தாக்கினான். அந்த சிலர் அவனை போலீசில் பிடித்து கொடுத்தனர். காவல் துறையும் அவன் மீது வழக்கு தொடுத்து சிறையில் அடைத்தனர். பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடந்ததால் கண்ணப்பன் இன்று பெரிய வேலையில் நல்ல கௌரவமாக வாழ்ந்து வருகிறான். சின்னப்பன் காது இருந்தும் காது கேளாதவர்கள் போல் வாய் இருந்தும் நல்லதை பேசாமல் கண்ணிருந்தும் நல்லதை பார்க்காமல் இன்று சிறையில் துன்பப்படுகிறான். எனவே நாம் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு அவர்களின் வழியில் நடந்து நம் வாழ்வில் முன்னேற்றம் அடைவோம்.
Super perfect this helped for me to write homework
பதிலளிநீக்குதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. உங்களின் கருத்து மேலும் எங்களை ஊக்குவிக்கிறது. மேலும் கதைககளை பெறுவதற்கு எங்களின் வலைப்பக்கத்தை தொடரவும்.
நீக்கு