குறள் 10 - கதை 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
சாலமன் பாப்பையா உரை : கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்
கலைஞர் உரை : வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
கதை :
ஒரு ஊர்ல கண்ணதாசன் அப்படினு ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு இப்போ அறுபது வயது. அவருக்கு மகிழன் னு ஒரு பையன் இருந்தான். அவனுக்கு வயது 25. இன்றைக்கு மகிழன் வாழ்க்கையில ஒரு முக்கியமான நாள். ஆம், மகிழனுக்கு ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்துல நல்ல சம்பளத்துள வேலை கிடைச்சுருக்கு. இந்த மகிழ்ச்சியான செய்தியோடு மகிழன் சைக்கிளை மிதித்துக்கொண்டு வேகமாக பீமாராஜ் ஆசிரியரை சந்திக்க சென்றான்.
பீமாராஜ் ஆசிரியர்தான் மகிழனின் உயர்ந்த நிலைக்கு காரணம்.
ஆம், பீமாராஜ் வாத்தியார்தான் மகிழன் 10 முதல் 12 வகுப்பு வரையிலான கணித மற்றும் அறிவியல் ஆசிரியர். அவரின் வழிகாட்டுதல் இருந்ததால் தான் மகிழன் இன்றைய உயர்ந்த நிலையை அடைய முடிந்தது. தனக்கு வேலை கிடைத்த செய்தியை பீமாராஜ் வாத்தியாரிடம் சொன்னதும் அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. வீட்டில் இருந்த சர்க்கரையை எடுத்து அவன் வாயில் போட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மகிழனும் தன்னை வழி நடத்தியதற்கு நன்றி தெரிவித்தான். பிறகு மகிழன் விடை பெறுகையில் அவன் கையில் திருக்குறள் புத்தகத்தை கொடுத்து வழியனுப்பினார்.
மகிழன் வீட்டிற்கு வந்து அவனுடைய தந்தையிடம் இந்த மகிழ்ச்சியை தெரியப்படுத்த கிளம்பினான். ஆனால் அவன் தந்தையோ இன்னும் வேலை முடித்து வீட்டிற்கு வரவில்லை. சரி வேலை செய்யும் இடத்திற்கு செல்லலாம் என்று கிளம்பினான்.. மூன்று மாடிகள் கொண்ட ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் பாதியில் ஒரு கயிற்றால் கட்டப்பட்ட கட்டையில் உட்கார்ந்து சுண்ணாம்பு அடித்துக் கொண்டு இருந்தார் அவன் தந்தை கண்ணப்பன். மகிழனை பார்த்ததும் கயிற்றை பிடித்து கீழே இறங்கினார்.
கீழே வந்து, என்ன மகிழா என்றார்.
அப்பா ஒரு மகிழ்ச்சியான செய்தி.
என்னப்பா?
அப்பா எனக்கு பெரிய கம்பெனில பெரிய வேலை கிடைச்சுருக்குப்பா. மாசம் 80000 சம்பளம்.
சொன்னவுடன் தன் மகனை பற்றிய எதிர்கால கவலையினை தன் மனதில் இருந்து அழித்து மகிழ்ச்சி கொண்டான்.
மகிழா நீ இன்று இந்த அளவிற்கு இந்த ஆழ்கடலை நீந்தி கடந்து முன்னேறியதற்கு காரணம் உன் ஆசியர் பீமாராஜ் வாத்தியார் தான்.
உன்னை போல நானும் என் வாழ்ககையில் என் ஆசிரியரின் பேச்சை கேட்டு இருந்தால் நானும் இன்று பெரிய இடம் சேர்ந்திருந்து உன்னையும் இதை விட பெரிய இடம் சேர்த்திருப்பேன் என்று வருந்தினான்.
அப்போது மகிழன், அப்பா வருந்தாதீர்கள்!
இனி நம் தலைமுறை எத்தகைய பெரிய கடலையும் நீந்தி கறை சேரும்.
இருவரும் உணர்வின் உச்சத்தில் கட்டி அணைத்துக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக