குறள் 13: விண்இன்று பொய்ப்பின்
குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
மு.வ விளக்கம்:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
கலைஞர் விளக்கம்:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்
கதை :
நகுலன் தனியார் துறையில கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தான் . அவனின் பணியே ஆறு ஏரி குளங்களை பிளாட் போட்டு விற்று கொடுப்பது. அதில் நல்ல லாபமும் பார்த்தான் . நாடு முழுவதும் தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் அதிகரிக்க அதிகரிக்க மரம், இயற்கை இவற்றின் தேவைகள் மனிதனின் கண்களுக்கு புலப்படவில்லை . இதற்கு நகுலனும் விதி விலக்கல்ல . தனக்கு சொந்தமான விளை நிலங்களை கூட விற்று விட்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தான் . பருவ காலம் மட்டும் தாமதித்து கொண்டிருக்குமா ? அதுவும் தன் வேலையை காட்ட தொடங்கி இருந்தது . மழைக்காலம் வந்தால் அதீத மழை பொலிவும் வெயில் காலம் வந்தால் தாங்க முடியாத வெப்பமும் நிலவியது . ஊரெங்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு . அரிசி பருப்பின் விலை தங்க விலை விற்றது . ஏழை மக்களுக்கு எட்டா கனியாகி இருந்தது . விலை வாசி ஏற்றத்தால் ரியல் எஸ்டேட் தொழிலும் நலிவடைந்து இருந்தது . அரிசி பருப்பே வாங்க முடியாத காரணத்தினால் வீடு நிலம் என வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை . எனவே நகுலனும் இந்த கால மாற்றத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தான் . எனவே மனதின் ஆறுதலுக்காக கடற்கரை சென்று இருந்தான் . ஒரு பாக்கெட் தண்ணீரின் விலை 150 ருபாய் . ஆனால் அவன் கண் முன்னே இந்த சமுத்திரத்தில் தன் எவ்வளவு தண்ணீர் . பருவ மழை பருவம் இவை மாற ஆரம்பித்தாள் நம்மை சுற்றி கடல் இருந்தாலும் குடிக்க ஒரு துளி தண்ணீர் கெடைக்காது என்பதை நன்கு உணர்ந்தான் .
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
பதிலளிநீக்குசொற்பொருள் சோர்வு படும்.