குறள் 8 - கதை 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. மு.வரதராசன் விளக்கம்: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது. சாலமன் பாப்பையா விளக்கம்: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம். சிவயோகி சிவக்குமார் விளக்கம்: முடிவை புரிந்துகொண்ட இயல்பானவன் நிழல் அடையாவிட்டால் பிறவி அறுப்பது கடினம். கதை : ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது. தான் மிகவும் கருப்பாக இருப்பதாக நினைத்து கவலை பட்டது. இதனால் புறாக்களிடம் போய் நட்பு கொண்டது. புறாக்கள் காகம் கருப்பாக இருப்பதால் அதனை கேலியும் கிண்டலும் செய்தன. ஆனால் அதை பற்றி அந்த காக்கை குஞ்சி கவலை பட வில்லை. தன்னை ஒரு புறவாக நினைத்து தன் கூட்டத்தில் இருந்து விலகியே இருந்தது. இதனை பார்த்து வருந்திய காக்கை கூட்டத்தின் தலைவன் அந்த காக்கை குஞ்சிடம் நீ காக்கை இனம். காக்கைகளின் குணம் தான் உன்னிடம் இருக்கும்.புறாக்களிடம் பழகுவதால் உன் தன்மையோ குணமோ மாற போவதில்லை என கூறியது. இதையெல்லாம் அந்த காக்கை குஞ்சி காதில...