குறள் 8 - கதை 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.



அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.



அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.



முடிவை புரிந்துகொண்ட இயல்பானவன் நிழல் அடையாவிட்டால் பிறவி அறுப்பது கடினம்.

கதை :



ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது. தான் மிகவும் கருப்பாக இருப்பதாக நினைத்து கவலை பட்டது. இதனால் புறாக்களிடம் போய் நட்பு கொண்டது. புறாக்கள் காகம் கருப்பாக இருப்பதால் அதனை கேலியும் கிண்டலும் செய்தன. ஆனால் அதை பற்றி அந்த காக்கை குஞ்சி கவலை பட வில்லை. தன்னை ஒரு புறவாக நினைத்து தன் கூட்டத்தில் இருந்து விலகியே இருந்தது. இதனை பார்த்து வருந்திய காக்கை கூட்டத்தின் தலைவன் அந்த காக்கை குஞ்சிடம் நீ காக்கை இனம். காக்கைகளின் குணம் தான் உன்னிடம் இருக்கும்.புறாக்களிடம் பழகுவதால் உன் தன்மையோ குணமோ மாற போவதில்லை என கூறியது. இதையெல்லாம் அந்த காக்கை குஞ்சி காதில் வாங்கவில்லை. 

ஒரு நாள் புறாக்கள் கூட்டம் இரை பற்றாக்குறையால் இடம் விட்டு இடம் பெயரை முடிவு செய்தது. காக்கை குஞ்சும் உடன் செல்வதற்கு தயாரானது. அப்போது தலைமை புறா இந்த கூட்டத்தில் உன்னை வெகு நாளாக பார்க்கிறேன். நீ எங்களுடன் வர இயலாது. நாங்கள் போகும் இடத்தில் எங்கள் இனத்தை மட்டுமே அனுமதிப்பனர். நீ உன் கூட்டத்தில் உள்ளவர்களின் அறிவுரை பின்பற்றி அவர்கள் வழி நடப்பதுதான் உனக்கு சிறந்தது என்று கூறியது. இதை கேட்ட காக்கை குஞ்சி அதிர்ச்சியானது. புறாக்கள் பறக்க ஆரம்பித்தன. காக்கை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தது . நாம் அழகாக இல்லை என்று அழகாக இருப்பவர்களிடம் நட்பு பாராட்டினால் நாமும் அழகாய் தெரிவோம் என நினைத்தது முட்டாள் தனம். நம் முன்னோர்களின் பேச்சை கேட்டு நடந்து இருக்கலாம் என யோசிக்கும் போது காக்கை கூட்டத்தின் தலைவன் வந்தது.என்ன நான் சொன்னது உண்மையாகி போனதா ? எனக் கேட்டது. அதற்கு காக்கை குஞ்சி என்னை மன்னித்து விடுங்கள நான் நிறத்தை வைத்து மதிப்பு போட்டிருக்க கூடாது. என் வாழ்க்கையை பற்றி சிந்திக்கும் எனக்கு அறிவுரைகளை வழங்கும் உங்களை மீறி போனது எனது தவறாகும் என கூறி அழுதது. போகட்டும் வா. இனியாவது நம் இனத்தோடு சேர்ந்து வாழலாம்.உனக்கு அங்கு எல்லா உரிமைகளும் சுதந்திரங்களும் உண்டு என கூறியவுடன் காக்கைக்கு சந்தோஷம் வந்தது.

எனவே நம் நலனின்  மீது அக்கறை கொண்டவர்களின் திருவடிகளை பற்றி நடப்போமாயின் இந்த பிறவி என்னும்  பெருங்கடலை எளிதாக கடக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறள் 12- கதை 12 துப்பார்க்குத் துப்பாய

குறள் 10 - கதை 10

குறள் 11- கதை 11