இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறள் 12- கதை 12 துப்பார்க்குத் துப்பாய

படம்
குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை மு.வ விளக்கம்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் கலைஞர் விளக்கம்:   யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது. சாலமன் பாப்பையா விளக்கம்: நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.   கதை : ஆறுமுகத்திற்கு 70 வயது நிரம்பியிருக்கும். தனது மகன் சண்முகம் விவசாய நிலத்தை விற்பதற்காக கையெழுத்து கேட்டு கொண்டிருந்தான் . ஆறுமுகத்திற்கு அதை விற்க மனதில்லை. சண்முகமோ அப்பா இந்த இடத்தை ரியல் எஸ்டேட் முகவர்களிடம் விற்றால் நிறைய விலைக்கு போகும் . அதை வைத்து நான் வியாபாரம் செய்து பிழைத்து  கொள்வேன் தயவு செய்து கையொப்பமிடுங்கள் என்று கூறினான் . சண்முகம் சொல்வதும் சரியென ஆறுமுகத்திற்கு பட்டது . முன் காலத்தில் பருவ மழை தவறாது பெய்து அந்த மழையால் விவசாயம் செழிப்பாக இருந்தது, அது மட்டுமில்லாம...