இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறள் 13: விண்இன்று பொய்ப்பின்

படம்
 குறள் 13: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி மு.வ விளக்கம்: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் கலைஞர் விளக்கம்: கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்    கதை : நகுலன் தனியார் துறையில கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தான் .  அவனின் பணியே ஆறு ஏரி குளங்களை பிளாட் போட்டு விற்று கொடுப்பது. அதில் நல்ல லாபமும் பார்த்தான் . நாடு முழுவதும் தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் அதிகரிக்க அதிகரிக்க மரம், இயற்கை இவற்றின் தேவைகள் மனிதனின் கண்களுக்கு புலப்படவில்லை .  இதற்கு நகுலனும் விதி விலக்கல்ல . தனக்கு சொந்தமான விளை நிலங்களை கூட விற்று விட்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தான் .  பருவ காலம் மட்டும் தாமதித்து கொண்டிருக்குமா ? அதுவும் தன் வேலையை காட்ட தொடங்கி இருந்தது . மழைக்காலம் வந்தால் அதீத மழை பொலிவும் வெயில் காலம் வந்தால் தாங்க முடியாத வெப்பமும் நிலவியது .  ஊரெங்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு .  அரிசி பருப்...