குறள் 5 - கதை 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. விளக்கம்: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் வந்து சேர்வதில்லை. கதை: ஒரு ஊர்ல கந்தன் என்பவன் வாழந்து வந்தான். அவன் ஒரு வாத்து வைத்து வளர்த்து வந்தான். தினம் வாத்துக்கு நல்ல தீனியிட்டு பராமரித்து வந்தான். கடவுள் பக்தியிலும் அவன் மிகுந்த ஆர்வமுடையவனாய் திகழ்ந்தான். மனமகிழ்ந்த கடவுள் அவனுக்கு வேண்டிய வரம் வழங்க அவன் முன் தோன்றினார். அப்போது கந்தன் நீங்கள் என் கண் முன் தோன்றியது பெரிய வரம். எனக்கு இதை விட பெரிய வரம் வேண்டாம் என்று கூறினான். தினம் உங்கள் பாதங்களை வணங்கி தொழுவதே பெரிய பாக்கியம் என்றும் கூறினான். இதனால் கடவுள் மனமகிழ்ந்து கடவுளாகிய எனையும், எனக்கு இணையான மனதின் பேச்சையும் கேட்டு நடப்பவர்கள் வாழ்வில் எந்த வித துன்பமும் அவனை அறியாமல் வந்து சேராது என கூறினார். அதோடு பொன் முட்டை இடும் வாத்தையும் கொடுத்து விட்டு சென்றார்.அந்த வாத்தை உபயோகித்து ஊரில் உள்ள அனைவருக்கும் அவனால் இயன்ற உதவிகளையும் புரிந்து வந்தான். எனவே நம் மன...