குறள் 3 - கதை 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலராகிய உள்ளத்தில் உறையும் கடவுளின் உபதேசத்தை அடைந்தவர் இந்தப் பூமியில் நீண்ட காலம் வாழ்வார்.
ரவியும் ராகுலும் சிறந்த நண்பர்கள். அவர்களின் பெற்றோர்கள் எப்பொழுதும் சிறந்த அறிவுரைகளை கூறுவார்கள். இருவரும் பெற்றோரின் பேச்சை மீறியதில்லை. தற்போது 9ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்று வேறு பள்ளியில் சேர்ந்தனர். அங்கு சில மோசமான நண்பர்களின் பழக்கத்தால் ராகுலின் பாதை மாறியது. படிப்பில் கவனம் சிதறியது. கடவுளுக்கு சமமான பெற்றோரின் பேச்சை அவன் மதிக்கவில்லை. தேர்வுகளில் தோல்வியுற்றான். ராகுலின் பெற்றோர் அவனுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அது எதையுமே அவன் காதில் வாங்கி கொள்வதாய் இல்லை. ஆனால் ரவியோ வேறு எங்கும் கவனம் சிதறாமல் படிப்பில் ஆர்வமாய் இருந்தான். பெற்றோரின் அறிவுரைக்கேற்ப நடந்து வகுப்பில் முதல் மாணவனாய் திகழ்ந்தான் .
எனவே கடவுளுக்கு சமமான பெற்றோரின் உபதேசங்களை கேட்டு நடப்பவர்கள் இந்த உலகில் மகிழ்ச்சியாய் நீண்ட காலம் வாழ்வர் .
கருத்துகள்
கருத்துரையிடுக