குறள் 4 - கதை 4

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விளக்கம்:

  தேவை தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காதவரை அடைந்தவருக்கு துன்பம் என்றும் இல்லை.

கதை:





ஒரு விவசாயி தன் வீட்டில் ஆடுகள் நிறைய வளர்த்து வந்தார். அதில் உள்ள வயதில் மூத்த ஆடு எப்போதுமே தன் முதலாளி எங்கு கூட்டி செல்கிறாரோ அங்கேயே மேயும். அந்த மூத்த ஆட்டினையே பின்பற்றி மற்ற ஆடுகளும் மேயும். இதில் ஒரு ஆட்டுக்கு மட்டும் விருப்பம் இல்லை. எப்போது பார்த்தாலும் ஒரே இடத்திற்கு செல்வது சலிப்பாக உள்ளது. எதிர் வீட்டு தோட்டத்தில் எவ்வளவு பச்சை புற்கள் நிறைந்துள்ளன. அவை மட்டும் கிடைத்தால் எப்படி இருக்கும் என நினைத்தது மட்டும் இல்லாமல் தனக்கு கூட்டாளியாக சில ஆடுககளை சேர்த்து கொண்டது. 

 விவசாயி வழக்கம் போல் தன் ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டு சென்றார். திட்டம் போட்ட ஆடும் அதன் கூட்டாளிகளும் எதிர்த்த வீட்டு தோட்டத்திற்கு தாவி குதித்து ஓடியது. அங்கு காவலாளி குச்சியை எடுத்து அடித்ததில் ஆட்டுக்கு கால் ஒடிந்தது. 

தன் விருப்பு வெறுப்புகளை துறந்து மூத்த ஆடு பின் சென்ற மற்ற ஆடுகள் நிம்மதியாக சுற்றி திரிந்தன. தன் விருப்பமே முக்கியம் என்று எதிர்த்த வீட்டு தோட்டத்தை மேய்ந்த ஆடுகள் நடக்க முடியாமல் தற்போது வீட்டிலேயே கட்டி போட்டு வைத்துள்ளனர்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறள் 12- கதை 12 துப்பார்க்குத் துப்பாய

குறள் 10 - கதை 10

குறள் 11- கதை 11