குறள் 10 - கதை 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். மு. வரதராசன் உரை : இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. சாலமன் பாப்பையா உரை : கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார் கலைஞர் உரை : வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும் கதை : ஒரு ஊர்ல கண்ணதாசன் அப்படினு ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு இப்போ அறுபது வயது. அவருக்கு மகிழன் னு ஒரு பையன் இருந்தான். அவனுக்கு வயது 25. இன்றைக்கு மகிழன் வாழ்க்கையில ஒரு முக்கியமான நாள். ஆம், மகிழனுக்கு ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்துல நல்ல சம்பளத்துள வேலை கிடைச்சுருக்கு. இந்த மகிழ்ச்சியான செய்தியோடு மகிழன் சைக்கிளை மிதித்துக்கொண்டு வேகமாக பீமாராஜ் ஆசிரியரை சந்திக்க சென்றான். பீமாராஜ் ஆசிரியர்தான் மகிழனின் உயர்ந்த நிலைக்கு காரணம். ஆம், பீமாராஜ் வாத்தியார்தான் மகிழன் 10 முதல் 12 வகுப்பு...