குறள்1- கதை-1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

 பகவன் முதற்றே உலகு



அகரம் எழுத்துக்களுக்கு எல்லாம்  முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் முதன்மை


ஒரு ஊரில் ராம்  என்பவன் இருந்தான். சிறு வயதில் ஏழமையில் இருந்த அவனுக்கு தான் எப்படியாவது படித்து முன்னேறிவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது . சிறு வயதில் தந்தையை இழந்த அவனுக்கு படிப்பு தூரமாகவே இருந்தது. ஆனாலும் கஷ்டப்பட்டாவது  படித்து விட வேண்டும் என்ற முடிவில் சிறு வயதிலேயே ஊறுகாய் விற்று வரும் வருமானத்தில் நோட்டு புத்தகங்கள் வாங்கி படித்தான் . பெரியவர்களை மதித்து நடந்தான் . பொய் கூறாமல் நேர்மையாக நடந்து தான் சிறு வயதில் என்னவாக ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டானோ அவ்வாறே ஆகினான். 

ஆகவே கடவுள் என்பது வெறும் சிலைகள் மட்டும் இல்லாமல் உணர்வுகளையும் அடிப்படையாக கொண்டது . ராம்  தன்  மீது நம்பிக்கை வைத்து பொய் கூறாமல், பெரியவர்களை மதித்து நேர்மையாக நடந்ததால் இன்று வாழ்வில் முன்னேறி உள்ளான் . இந்த இடத்தில் கடவுள் என்பது இந்த உணர்வுகளை குறிக்கின்றது. எனவே எல்லாவற்றிற்கும் முதன்மையாக இருக்கும் கடவுளுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்பது இவ்வுலகில் நேர்மையாக வாழ்வது.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறள் 12- கதை 12 துப்பார்க்குத் துப்பாய

குறள் 10 - கதை 10

குறள் 11- கதை 11