குறள் 2 - கதை 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் 

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

கதை விளக்கம் :

வாசு ஒரு பெரிய நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்தான். அவன் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து தற்பெருமை தலைக்கேறி கொண்டது. தான்தான் உயர்ந்தவன் தன்னால் மட்டுமே எல்லாம் முடியும் என்று அடுத்தவர்களை உதாசீன படுத்தினான். எப்போதும் சிடு சிடு என்று பேசிக்கொண்டு யாரிடமும் மரியாதையாக நடந்துகொள்ளாமல் தலை கணமாய் இருந்தான். இதனால் சக ஊழியர்கள் அவனை பற்றி மேலிடத்தில் புகார் செய்தனர் . அலுவலகத்தில் அவனை இடை நீக்கம் செய்து தண்டனை கொடுக்கப்பட்டது.

நாம் என்னதான் கல்வி பயின்றாலும் நல்ல வேலையில் இருந்தாலும் கடவுளிடமும் சக மனிதர்களிடத்திலும் அன்பு கொள்ளாமல் இருந்தால் அது தீமையிலேயே போய்  முடியும் . 

   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறள் 12- கதை 12 துப்பார்க்குத் துப்பாய

குறள் 10 - கதை 10

குறள் 11- கதை 11