குறள் 7 - கதை 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

விளக்கம்:

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

மு.வரதராசனார்

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

சாலமன் பாப்பையா

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

கலைஞர்

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

கதை:



ராம் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். இந்த நிறுவனத்தில் சேரும் முன் அவனுக்கு வேறு எங்குமே வேலை கிடைக்கவில்லை. ஏறி இறங்காத அலுவலகங்களே இல்லை. ஒரு கட்டத்தில் தனக்கு வேலை கிடைக்காது என்ற எண்ணத்தில் ஊருக்கு செல்ல முடிவெடுத்தான். அப்போது அவன் தங்கி இருக்கு அறையின் ஜன்னலில் அமர்ந்து சாலையை பார்த்து கொண்டு இருந்தான். அப்போது ஒரு கண் தெரியாத ஒருவர் பேனா விற்று கொண்டிருந்தார். இவரிடம் போய் இந்த பேனாவை யார் வாங்க போகிறார்கள் என்று நினைத்து தானே பொய் ஒரு பேனாவை வாங்கி வருவோம் என்று அவரிடம் சென்றான். பேனாவை வாங்கி விட்டு அவரிடம் இந்த பேனாக்கள் தினம் விற்று விடுமா? இதற்கு நீங்கள் வெகு நேரம் காத்து கொண்டிருக்க வேண்டுமே  என்று கேட்டான். அதற்கு அந்த பேனா வியாபாரி என் மனதில் நம்பிக்கை மற்றும் கடவுளின் மேல் உள்ள நம்பிக்கை தீரும் வரை காத்திருப்பதில் எனக்கு கவலை இல்லை. ஒரு செயலை அடைய வேண்டுமெனில் நாம் கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து காத்திருப்பதால் நம் மனதில் எந்த கவலையும் வராமல் நன்மைகள் நம்மை வந்து சேரும் என்று கூறினார்.


அப்போது ராமிற்கு புரிந்தது. தன் திறமையின் மீதும் கடவுளின் மீதும் நம்பிக்கை வைத்தான். மீண்டும் நேர்முக தேர்வினை எதிர் கொண்டு வெற்றி பெற்றான்.இப்போது நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறான்.


தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளை பற்றியோர் வாழ்வில் மனக்கவலைகள் அகலும் என்பது தெளிவாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறள் 12- கதை 12 துப்பார்க்குத் துப்பாய

குறள் 10 - கதை 10

குறள் 11- கதை 11