இடுகைகள்

குறள் 8 - கதை 8

படம்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. மு.வரதராசன் விளக்கம்: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது. சாலமன் பாப்பையா விளக்கம்: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம். சிவயோகி சிவக்குமார் விளக்கம்: முடிவை புரிந்துகொண்ட இயல்பானவன் நிழல் அடையாவிட்டால் பிறவி அறுப்பது கடினம். கதை : ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது. தான் மிகவும் கருப்பாக இருப்பதாக நினைத்து கவலை பட்டது. இதனால் புறாக்களிடம் போய் நட்பு கொண்டது. புறாக்கள் காகம் கருப்பாக இருப்பதால் அதனை கேலியும் கிண்டலும் செய்தன. ஆனால் அதை பற்றி அந்த காக்கை குஞ்சி கவலை பட வில்லை. தன்னை ஒரு புறவாக நினைத்து தன் கூட்டத்தில் இருந்து விலகியே இருந்தது. இதனை பார்த்து வருந்திய காக்கை கூட்டத்தின் தலைவன் அந்த காக்கை குஞ்சிடம் நீ காக்கை இனம். காக்கைகளின் குணம் தான் உன்னிடம் இருக்கும்.புறாக்களிடம் பழகுவதால் உன் தன்மையோ குணமோ மாற போவதில்லை என கூறியது. இதையெல்லாம் அந்த காக்கை குஞ்சி காதில...

குறள் 7 - கதை 7

படம்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. விளக்கம்: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. மு.வரதராசனார் தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது. சாலமன் பாப்பையா தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம். கலைஞர் ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. கதை: ராம் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். இந்த நிறுவனத்தில் சேரும் முன் அவனுக்கு வேறு எங்குமே வேலை கிடைக்கவில்லை. ஏறி இறங்காத அலுவலகங்களே இல்லை. ஒரு கட்டத்தில் தனக்கு வேலை கிடைக்காது என்ற எண்ணத்தில் ஊருக்கு செல்ல முடிவெடுத்தான். அப்போது அவன் தங்கி இருக்கு அறையின் ஜன்னலில் அமர்ந்து சாலையை பார்த்து கொண்டு இருந்தான். அப்போது ஒரு கண் தெரியாத ஒருவர் பேனா விற்று கொண்டிருந்தார். இவரிடம் போய் இந்த பேனாவை யார் வாங்க போகிறார்கள் என்று நினைத்து தானே ...

பார்வையாளர்கள் கவனத்திற்கு

 பார்வையாளர்கள் கவனத்திற்கு:  தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நீங்கள் இடும் கருத்துக்கள் என் சரி தவறுகளை கண்டறிந்து மேலும் முன்னேற ஒரு வாய்ப்பாக அமையும். பார்வையிட்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

குறள் 6 - கதை 6

படம்
 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். விளக்கம்: மு.வ : ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர் சாலமன் பாப்பையா : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார் கதை: ஒரு ஊரில் மனோகர் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் ஆடம்பரமாக வாழ ஆசை படுபவன். கண்களுக்கு பிடித்த பொருள்களையெல்லாம் வாங்கி வைப்பான்.அவன் செவிகளில் யாராவது அவனை விட விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி விட்டார்கள் என தெரிந்தால் போதும் உடனே அதை எப்படியாது அடைய முயற்சிப்பான். மூக்கை துளைக்கும் வாசனை திரவியமும் வாய்க்கு ருசியான சாப்பாடு என ஐம்புலன்களையும் அடக்க தெரியாமல் வாழந்து வந்தான். அதே ஊரில் செல்வம் என்பவன் இருந்தான். தான் தினம் சம்பாதித்து வரும் பணத்தில் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வான். அவன் மனம் எப்பொழுதும் எதற்கும் ஆசைப்பட்டது இல்லை.  மனோகரிடம் என்ன வசதி இருந்தாலும் எவ்வளவு பணம் இருந்தாலு...

குறள் 5 - கதை 5

படம்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. விளக்கம்: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் வந்து சேர்வதில்லை. கதை: ஒரு ஊர்ல கந்தன்  என்பவன் வாழந்து வந்தான். அவன் ஒரு வாத்து  வைத்து வளர்த்து வந்தான். தினம் வாத்துக்கு  நல்ல தீனியிட்டு பராமரித்து வந்தான். கடவுள் பக்தியிலும் அவன் மிகுந்த ஆர்வமுடையவனாய் திகழ்ந்தான். மனமகிழ்ந்த கடவுள் அவனுக்கு வேண்டிய வரம் வழங்க அவன் முன் தோன்றினார். அப்போது கந்தன் நீங்கள் என் கண் முன் தோன்றியது பெரிய வரம். எனக்கு இதை விட பெரிய வரம் வேண்டாம் என்று கூறினான். தினம் உங்கள் பாதங்களை வணங்கி தொழுவதே பெரிய பாக்கியம் என்றும் கூறினான். இதனால் கடவுள் மனமகிழ்ந்து கடவுளாகிய எனையும், எனக்கு இணையான மனதின் பேச்சையும் கேட்டு நடப்பவர்கள் வாழ்வில் எந்த வித துன்பமும் அவனை அறியாமல் வந்து சேராது என கூறினார். அதோடு பொன் முட்டை இடும் வாத்தையும் கொடுத்து விட்டு சென்றார்.அந்த வாத்தை உபயோகித்து ஊரில் உள்ள அனைவருக்கும் அவனால் இயன்ற உதவிகளையும் புரிந்து வந்தான். எனவே நம் மன...

குறள் 4 - கதை 4

படம்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல . விளக்கம்:    தேவை தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காதவரை அடைந்தவருக்கு துன்பம் என்றும் இல்லை. கதை: ஒரு விவசாயி தன் வீட்டில் ஆடுகள் நிறைய வளர்த்து வந்தார். அதில் உள்ள வயதில் மூத்த ஆடு எப்போதுமே தன் முதலாளி எங்கு கூட்டி செல்கிறாரோ அங்கேயே மேயும். அந்த மூத்த ஆட்டினையே பின்பற்றி மற்ற ஆடுகளும் மேயும். இதில் ஒரு ஆட்டுக்கு மட்டும் விருப்பம் இல்லை. எப்போது பார்த்தாலும் ஒரே இடத்திற்கு செல்வது சலிப்பாக உள்ளது. எதிர் வீட்டு தோட்டத்தில் எவ்வளவு பச்சை புற்கள் நிறைந்துள்ளன. அவை மட்டும் கிடைத்தால் எப்படி இருக்கும் என நினைத்தது மட்டும் இல்லாமல் தனக்கு கூட்டாளியாக சில ஆடுககளை சேர்த்து கொண்டது.   விவசாயி வழக்கம் போல் தன் ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டு சென்றார். திட்டம் போட்ட ஆடும் அதன் கூட்டாளிகளும் எதிர்த்த வீட்டு தோட்டத்திற்கு தாவி குதித்து ஓடியது. அங்கு காவலாளி குச்சியை எடுத்து அடித்ததில் ஆட்டுக்கு கால் ஒடிந்தது.  தன் விருப்பு வெறுப்புகளை துறந்து மூத்த ஆடு பின் சென்ற மற்ற ஆடுகள் நிம்மதியாக சுற்றி திரிந்தன. தன் விருப்ப...

குறள் 3 - கதை 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். மலராகிய உள்ளத்தில் உறையும் கடவுளின் உபதேசத்தை அடைந்தவர் இந்தப் பூமியில் நீண்ட காலம் வாழ்வார்.   ரவியும் ராகுலும் சிறந்த நண்பர்கள். அவர்களின் பெற்றோர்கள் எப்பொழுதும் சிறந்த அறிவுரைகளை கூறுவார்கள். இருவரும் பெற்றோரின் பேச்சை மீறியதில்லை. தற்போது 9ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்று வேறு பள்ளியில் சேர்ந்தனர். அங்கு சில மோசமான நண்பர்களின் பழக்கத்தால் ராகுலின் பாதை மாறியது. படிப்பில் கவனம் சிதறியது. கடவுளுக்கு சமமான பெற்றோரின் பேச்சை அவன் மதிக்கவில்லை.  தேர்வுகளில் தோல்வியுற்றான். ராகுலின் பெற்றோர் அவனுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அது எதையுமே அவன் காதில் வாங்கி கொள்வதாய் இல்லை. ஆனால் ரவியோ வேறு எங்கும் கவனம் சிதறாமல் படிப்பில் ஆர்வமாய் இருந்தான். பெற்றோரின் அறிவுரைக்கேற்ப நடந்து வகுப்பில் முதல் மாணவனாய் திகழ்ந்தான் . எனவே கடவுளுக்கு சமமான பெற்றோரின் உபதேசங்களை கேட்டு நடப்பவர்கள் இந்த உலகில் மகிழ்ச்சியாய் நீண்ட காலம் வாழ்வர் .