இடுகைகள்

அதிகாரம் 2 – வான்சிறப்பு

படம்
குறள் 11:  வானின் றுலகம் வழங்கி வருதலால்  தானமிழ்தம் என்றுணரற் பாற்று  மு.வ விளக்கம்:  மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்  சாலமன் பாப்பையா விளக்கம்:  உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் கலைஞர் விளக்கம்:   உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. குறள் 12:  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்  துப்பாய தூஉ மழை  மு.வ விளக்கம்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை  விளைவித்துத்  தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் கலைஞர் விளக்கம்: யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது குறள் 13:   விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி  மு.வ விளக்கம்:   மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக ...

குறள் 10 - கதை 10

படம்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். மு. வரதராசன் உரை :  இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. சாலமன் பாப்பையா உரை :  கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார் கலைஞர் உரை :  வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்   கதை : ஒரு ஊர்ல கண்ணதாசன் அப்படினு ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு இப்போ அறுபது வயது. அவருக்கு மகிழன் னு ஒரு பையன் இருந்தான். அவனுக்கு வயது 25. இன்றைக்கு மகிழன் வாழ்க்கையில ஒரு முக்கியமான நாள்.  ஆம், மகிழனுக்கு ஒரு மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்துல நல்ல சம்பளத்துள வேலை கிடைச்சுருக்கு. இந்த மகிழ்ச்சியான செய்தியோடு மகிழன் சைக்கிளை மிதித்துக்கொண்டு வேகமாக பீமாராஜ் ஆசிரியரை சந்திக்க சென்றான்.  பீமாராஜ் ஆசிரியர்தான் மகிழனின் உயர்ந்த நிலைக்கு காரணம். ஆம்,  பீமாராஜ் வாத்தியார்தான் மகிழன் 10 முதல் 12 வகுப்பு...

குறள் 9 - கதை 9

படம்
குறள் 9 : கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. சாலமன் பாப்பையா விளக்கம்: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே கலைஞர் விளக்கம்: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் கதை: ஒரு ஊரில் சின்னப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் சிறுவயதிலேயே மதுவிற்கு அடிமை ஆனான். அதே ஊரில் கண்ணப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். சின்னப்பன் , கண்ணப்பனும் ஒன்றாக படித்தவர்கள். கண்ணப்பன் சிறுவயது முதலே நன்றாக படித்து வந்தான். பெரியவர்களின் சொல் கேட்டு அவர்கள் கூறும் வழியில் நடந்து இன்று பெரிய வேலையில் உள்ளான். ஆனால் சின்னப்பன் மதுவிற்கு அடிமையானதால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. அவன் மனம் போன போக்கிலே வாழ்ந்து வந்தான். அவனது பெற்றோர் சொல் பேச்சு கேட்க வில்லை பெரியவர்கள் சொல்பேச்சு கேட்க வில்லை. ஒருநாள் மது அருந்திவிட்டு ஒரு சாக்கடையில் விழுந்து கிடந்தான்....

குறள் 8 - கதை 8

படம்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. மு.வரதராசன் விளக்கம்: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது. சாலமன் பாப்பையா விளக்கம்: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம். சிவயோகி சிவக்குமார் விளக்கம்: முடிவை புரிந்துகொண்ட இயல்பானவன் நிழல் அடையாவிட்டால் பிறவி அறுப்பது கடினம். கதை : ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது. தான் மிகவும் கருப்பாக இருப்பதாக நினைத்து கவலை பட்டது. இதனால் புறாக்களிடம் போய் நட்பு கொண்டது. புறாக்கள் காகம் கருப்பாக இருப்பதால் அதனை கேலியும் கிண்டலும் செய்தன. ஆனால் அதை பற்றி அந்த காக்கை குஞ்சி கவலை பட வில்லை. தன்னை ஒரு புறவாக நினைத்து தன் கூட்டத்தில் இருந்து விலகியே இருந்தது. இதனை பார்த்து வருந்திய காக்கை கூட்டத்தின் தலைவன் அந்த காக்கை குஞ்சிடம் நீ காக்கை இனம். காக்கைகளின் குணம் தான் உன்னிடம் இருக்கும்.புறாக்களிடம் பழகுவதால் உன் தன்மையோ குணமோ மாற போவதில்லை என கூறியது. இதையெல்லாம் அந்த காக்கை குஞ்சி காதில...

குறள் 7 - கதை 7

படம்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. விளக்கம்: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. மு.வரதராசனார் தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது. சாலமன் பாப்பையா தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம். கலைஞர் ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை. கதை: ராம் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். இந்த நிறுவனத்தில் சேரும் முன் அவனுக்கு வேறு எங்குமே வேலை கிடைக்கவில்லை. ஏறி இறங்காத அலுவலகங்களே இல்லை. ஒரு கட்டத்தில் தனக்கு வேலை கிடைக்காது என்ற எண்ணத்தில் ஊருக்கு செல்ல முடிவெடுத்தான். அப்போது அவன் தங்கி இருக்கு அறையின் ஜன்னலில் அமர்ந்து சாலையை பார்த்து கொண்டு இருந்தான். அப்போது ஒரு கண் தெரியாத ஒருவர் பேனா விற்று கொண்டிருந்தார். இவரிடம் போய் இந்த பேனாவை யார் வாங்க போகிறார்கள் என்று நினைத்து தானே ...

பார்வையாளர்கள் கவனத்திற்கு

 பார்வையாளர்கள் கவனத்திற்கு:  தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நீங்கள் இடும் கருத்துக்கள் என் சரி தவறுகளை கண்டறிந்து மேலும் முன்னேற ஒரு வாய்ப்பாக அமையும். பார்வையிட்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

குறள் 6 - கதை 6

படம்
 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். விளக்கம்: மு.வ : ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர் சாலமன் பாப்பையா : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார் கதை: ஒரு ஊரில் மனோகர் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் ஆடம்பரமாக வாழ ஆசை படுபவன். கண்களுக்கு பிடித்த பொருள்களையெல்லாம் வாங்கி வைப்பான்.அவன் செவிகளில் யாராவது அவனை விட விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி விட்டார்கள் என தெரிந்தால் போதும் உடனே அதை எப்படியாது அடைய முயற்சிப்பான். மூக்கை துளைக்கும் வாசனை திரவியமும் வாய்க்கு ருசியான சாப்பாடு என ஐம்புலன்களையும் அடக்க தெரியாமல் வாழந்து வந்தான். அதே ஊரில் செல்வம் என்பவன் இருந்தான். தான் தினம் சம்பாதித்து வரும் பணத்தில் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வான். அவன் மனம் எப்பொழுதும் எதற்கும் ஆசைப்பட்டது இல்லை.  மனோகரிடம் என்ன வசதி இருந்தாலும் எவ்வளவு பணம் இருந்தாலு...